சென்னை திருவொற்றியூரில் அமலாக்கத் துறை சோதனை - டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் இல்லத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு
சென்னை, 21 ஜூலை (ஹி.ச.) சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறையினர் (ED) ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வரும் நிலையில், வடசென்னை திருவொற்றியூரிலும் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருவொற்றியூர் பத்ம
அமலாக்கத்துறை


சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறையினர் (ED) ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வரும் நிலையில், வடசென்னை திருவொற்றியூரிலும் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருவொற்றியூர் பத்மநாப காலனி 3-வது தெருவில் வசித்து வரும் முருகேசன் (70) என்பவரது இல்லத்தில், ஆறு பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது.

முருகேசனின் மகன்களான ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோர் 'வசந்தம் டிரான்ஸ்போர்ட்' என்ற பெயரில் கண்டெய்னர் போக்குவரத்து, ஷிப்பிங், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இந்த இல்லத்தில் வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி பகுதியிலும் அமலாக்கத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனையின் காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam