விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு
தூத்துக்குடி, 21 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதைத் தொடர்ந்து தூத
Vilathikulam MLA


தூத்துக்குடி, 21 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றறப்பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி தலைமையில், ஜீ.வி.மார்க்கண்டேயனை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின், மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்

அவரை 15 நாள்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திங்கள்கிழமை இரவு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN