Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 ஜூலை (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் சிஜேபி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாராளுமன்ற வீதி மற்றும் கன்னாட் பிளேஸ் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கலவரம், வன்முறை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் போலீசாரின் ஜாக்கெட், ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களை பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கன்னாட் பிளேஸ் வெளிவட்டத்தில் உள்ள ரீகல் திரையரங்கம் அருகே சமூக விரோதிகள் சிலர் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b