Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 21 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வி.கே.புரம் சந்தன மாரியம்மன் கோவில் எதிரே உள்ள புரோட்டா கடை அருகே, நேற்று (ஜூலை 20) இரவு அரிவாளால் தாக்குதல் நடைபெற்றது.
வி.கே.புரத்தைச் சேர்ந்த சுபாஷ் (21), இசக்கிபாபு (19), பாலமுருகன் (16) ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரிந்த இருவர் சுபாஷை அரிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
சுபாஷ் தப்பியோடிய நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற இசக்கிபாபு மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரை அரிவாளால் தாக்கி, மிரட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.
காயமடைந்த இசக்கிபாபு மற்றும் பாலமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக இசக்கிபாபு அளித்த புகாரின் பேரில், வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவான இரு குற்றவாளிகளையும் கைது செய்ய வி.கே.புரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam