Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தால் தவித்து வந்த 1,200 பேர், அரசின் நட்புடன் உங்களோடு மனநல ஆலோசனை சேவையின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த மனிதநேய முயற்சி, மாநிலம் முழுவதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வாழ்க்கையின் பல்வேறு அழுத்தங்கள், குடும்பப் பிரச்சினைகள், தேர்வு பயம் மற்றும் மனச்சோர்வு காரணமாக தற்கொலை முடிவை நோக்கிச் சென்றவர்களுக்கு, இந்த சேவை உற்ற நண்பனாக கைகொடுத்துள்ளது. தொலைபேசி வழியாகவும், நேரடி ஆலோசனை மூலமாகவும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
அவர்களின் கனிவான அணுகுமுறையும், ரகசியம் காக்கப்படும் என்ற உறுதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் மனக்குமுறல்களை தயக்கமின்றி வெளிப்படுத்த தைரியம் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 1,200 பேரும் தற்போது தொடர் கண்காணிப்பிலும், தேவையான மருத்துவ சிகிச்சையிலும் உள்ளனர். தற்கொலை என்பது பிரச்சினைக்கான தீர்வு அல்ல, பேசுவதன் மூலமும், சரியான நேரத்தில் உதவி பெறுவதன் மூலமும் வாழ்க்கையை மீண்டும் வெல்ல முடியும் என்பதை இந்த சாதனை நிரூபித்துள்ளது. மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இவ்வேளையில், இது போன்ற சேவைகள் தமிழகத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளன.
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடனடி உதவிக்கு 14416 என்ற Tele-MANAS இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b