திருப்பதியில் அனுமன் சிலையை திருடிய மர்ம நபர் - போலீசார் வலைவீச்சு
திருப்பதி , 22 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், மலைப்பாதையில் நடைபயணமாகவும் சென்று வருகின்றனர். நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், வழியில் அமைந்துள்ள சிறிய தெய்வ சிலைகளை வ
A


திருப்பதி , 22 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநிலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், மலைப்பாதையில் நடைபயணமாகவும் சென்று வருகின்றனர்.

நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், வழியில் அமைந்துள்ள சிறிய தெய்வ சிலைகளை வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், முதல் மலைப்பாதையின் 7-வது மைல் பகுதியில் அமைந்திருந்த சிறிய அனுமன் கற்சிலை நேற்று நள்ளிரவில் மர்ம நபரால் திருடப்பட்டுள்ளது.

சாமி கும்பிடுவது போல் வந்த அந்த நபர், அங்கிருந்த அனுமன் சிலையை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

காலை சிலை காணாமல் போனதை அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர் ஒருவர் அனுமன் சிலையை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிலையை திருடிச் சென்ற மர்ம நபரை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருப்பதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA