ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு -சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு சம்மதம்
சென்னை 22 ஜூலை (ஹி.ச.) ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. விசாரணையின்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்
ஆம்ஸ்ட்ராங்


சென்னை 22 ஜூலை (ஹி.ச.)

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

விசாரணையின்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. மேலும், சிபிஐ விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரியது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியது.

அதேவேளையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Hindusthan Samachar / GOKILA arumugam