Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில், ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை துணை கமிஷனர் தரணிதரன் வீடு மற்றும் அவரது மனைவியும் ஆடிட்டருமான பத்மினியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை (ED) நேற்று காலை தொடங்கிய சோதனை நிறைவடைந்தது.
அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள ஒரு வாடிக்கையாளருக்கு (Client) ஆடிட்டராக பத்மினி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam