12 முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து இன்று தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை, 22 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசின் 12 முக்கியத் துறைகளின் தற்போதைய செயல்பாடுகள், முன்னேற்றம் மற்றும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆய்வுக் கூட்
சாய்குமார்


சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசின் 12 முக்கியத் துறைகளின் தற்போதைய செயல்பாடுகள், முன்னேற்றம் மற்றும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆய்வுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நலன், பொதுத்துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, தொழில்துறை, உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் முதலமைச்சரின் முகவரி துறை ஆகிய 12 முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும், அரசுத் திட்டங்களை விரைவாகவும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P