Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்தும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு என்றும், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை பாதிக்கும் இந்த விவகாரத்தில் வாக்கு அரசியல் செய்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை தாங்கள் அளிக்கமாட்டோம் என்றும் கூறினார்.
நீட் போன்ற தேர்வுகளை ஒழிக்க கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அது சாத்தியமாகாத நிலையில் இடைக்காலத் தீர்வாக Special Concurrent List உருவாக்கி, கல்வி மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார்.
மக்களின் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு மதித்து, நீட் தேர்வை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும் என்றும் தனது பதிவில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P