மத்திய அரசிடம் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
புதுடெல்லி, 22 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP), மத்திய அரசிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக கட
Cockroach-Janata-Party


புதுடெல்லி, 22 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP), மத்திய அரசிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பிரதிநிதிகளான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

அந்த மனுவில்,

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடு மற்றும் அதனைத் தொடர்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கோரிக்கைகள் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், அமைச்சர்களின் இல்லத்துக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்காமல், அரசு தரப்பினரே ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் சி.ஜே.பி. வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அதிகரித்து வருகிறது.

இந்த விவகாரம் மத்திய அரசுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P