Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 22 ஜூலை (ஹி.ச.)
தருமபுரி அருகே தோக்கம்பட்டி கிராமத்தில் தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோக்கம்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணனின் மனைவி அம்சா (35), மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) ஆகியோர் கடந்த 19ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து மாயமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில், அம்சாவின் தந்தைக்கு சொந்தமான நிலத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கிணற்றில் நான்கு பேரின் சடலங்களும் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
தகவலறிந்து சென்ற அதியமான் கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நான்கு பேரின் உடல்களிலும் கயிறு கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுவதால், இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கணவர் சரவணனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam