Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.
பிறகு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று ( ஜூலை 22) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430க்கும், சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,245க்கும் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P