Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 22 ஜூலை (ஹி.ச.)
தமிழக முதல்வரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.
பள்ளிபாளையத்தில் உள்ள ராயல் திரையரங்கில் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள், அரசின் விதிமுறைகளை மீறி ரூ.300 முதல் ரூ.800 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி திரையரங்கு நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த திரையரங்கு நிர்வாகம்,
பட விநியோக நிறுவனம் கூறியபடியே டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும், விதிப்படி ரூ.190-க்கு விற்க வேண்டுமெனில் அதுகுறித்து விநியோக நிறுவனத்திடம் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், முன்பே குறைந்த விலையில் வாங்கிய டிக்கெட்டுகளை சிலர் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்ததாகவும், தற்போதும் அதே நோக்கத்தில்தான் குறைந்த விலையில் டிக்கெட் கேட்பதாகவும் கூறியது.
தகவலறிந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமரசப்படுத்தினர்.
ரசிகர்கள் தரப்பில், மற்ற திரையரங்குகளில் ரூ.300-க்குள் டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில், இந்த திரையரங்கில் மட்டும் அதிக கட்டணம் கேட்பதாகவும், இதனால் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்ததால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam