கல்வியின் வணிகமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் - மத்திய அரசை விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி
சென்னை, 22 ஜூலை (ஹி.ச.) டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வியின் வணிகமயமாக்கலுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்தபோதிலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறாம
Kcp


Gg


சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)

டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வியின் வணிகமயமாக்கலுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை பெய்தபோதிலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறாமல் போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு மத்திய கல்வி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.

சொந்தக் கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தால், அதற்கான பொறுப்பு பிரதமர் மீதும் உள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், போராட்டக்காரர்களுக்கு பொதுமக்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்து வழங்கி வருவதாகவும், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளைச் சேகரித்து போராட்டப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, பாஜகவின் பிம்பத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில், பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கே.சி. பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ