Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்று அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட்டை பலமாக உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து குடியிருப்பின் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த சட்ட ஆலோசகர் கார்த்திக் படுகாயமடைந்தார். விபத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் குடியிருப்புவாசிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்தும் விரிவாக விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b