Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 22 ஜூலை (ஹி.ச.)
ஜூலை 18 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார்.
இதையடுத்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த விளாத்திகுளம் காவல்துறையினர், ஜூலை 20 அதிகாலை அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திமுக எம்எல்ஏவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார்.
இவரை பார்ப்பதற்காக திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மத்திய சிறைச்சாலை முன்பாக தனது வாகனத்தை உள்ளே அனுமதிக்க வேண்டுமென தெரிவித்து வருகிறார்.
அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருவதால் வாகனத்தை அங்கே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Hindusthan Samachar / ANANDHAN