லக்னோவில் இன்று பாஜக பிரமாண்ட போராட்டம் - காங்கிரஸ் அலுவலகம் முன்பு பரபரப்பு
லக்னோ , 22 ஜூலை (ஹி.ச.) தலைநகர் புதுடெல்லியில் நேற்று ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. நேற்று, ஜந்தர் மந்த
Massive BJP protest in Lucknow today


லக்னோ , 22 ஜூலை (ஹி.ச.)

தலைநகர் புதுடெல்லியில் நேற்று ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

நேற்று, ஜந்தர் மந்தர் பகுதியிலும், பிரதமர் இல்லத்திற்கு வெளியேயும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அவர்களின் இந்த செயலால் தேசிய தலைநகரில் பெரும் போக்குவரத்து நெரிசலும், பாதுகாப்பு குளறுபடியும் ஏற்பட்டது.

பிரதமரின் பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக காங்கிரஸ் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அத்துமீறலை வன்மையாக கண்டித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் காங்கிரஸின் ஜனநாயக விரோத போக்கை அம்பலப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் 1 மணியளவில் லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் பங்கஜ் சவுத்ரி தலைமை தாங்குகிறார். இதில் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனால் லக்னோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b