டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
புதுடெல்லி, 22 ஜூலை (ஹி.ச.) தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ
மெட்ரோ


புதுடெல்லி, 22 ஜூலை (ஹி.ச.)

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC) அறிவித்துள்ளது.

போராட்டம் நடைபெறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஎம்ஆர்சி தெரிவித்துள்ளது.

இதனால் அலுவலக நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டதுடன், பலர் மாற்று போக்குவரத்து வசதிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மூடப்பட்டுள்ள முக்கிய மெட்ரோ நிலையங்களில் ராஜீவ் சவுக், ஜன்பத், பட்டேல் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட், மண்டி ஹவுஸ், லோக் கல்யாண் மார்க், பரகம்பா ரோடு, ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம் உள்ளிட்ட 16 நிலையங்கள் அடங்கும்.

எனினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் நிலையங்களில் வழித்தட மாற்று (Interchange) வசதி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

போராட்டங்கள் தொடரும் நிலையில், பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஎம்ஆர்சி தெரிவித்துள்ளது.

மெட்ரோ சேவை இயல்பு நிலைக்கு திரும்புவது குறித்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P