நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு - டெல்லி மாணவர் போராட்டத்திற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு
சென்னை, 22 ஜூலை (ஹி.ச.) புதுதில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள
M K Stalin


Bb


சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)

புதுதில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில்தான் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள்தான் முதலில் எச்சரித்தோம்.

அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது – நீட் ஒழிப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும்.

நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ