சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
கன்னியாகுமரி, 22 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்த சபரிவர்மன் (வயது 34)ர தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். மாற்று திறனாளியான இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திர
சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்


கன்னியாகுமரி, 22 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்த சபரிவர்மன் (வயது 34)ர தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

மாற்று திறனாளியான இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த

9-ந் தேதி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர்.

இதையடுத்து கடந்த 13-ந்தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரி வர்மன் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் சபரிவர்மனை போலீசார் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை கொண்டு கைது செய்யப்பட்டு உள்ள சிறை கைதிகள் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய 3 கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதற்காக காவல்துறை சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் கைதிகள் 3 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கில் வெளிப்படைத்தன்மை மற்றும் தீவிர விசாரணையை உறுதிசெய்யும் பொருட்டுச் சபரிவர்மன் கொலை வழக்கின் விசாரணையை

சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b