டெல்லியில் ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தை நசுக்கும் செயல் - தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்நாடு, 22 ஜூலை (ஹி.ச.) டெல்லியில் இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை இழுத்துச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என தமிழக வெற்றிக
தவெக


தமிழ்நாடு, 22 ஜூலை (ஹி.ச.)

டெல்லியில் இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை இழுத்துச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் எக்ஸ் பதிவில்,

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், அமைதியான போராட்டத்துக்கு ஆதரவாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதுடன், மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்வதால், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P