நீட் முறைகேடு தொடர்பாக போராடும் இளைஞர்கள் மீது அரச வன்முறையா ? – மத்திய அரசை விமரிசித்த சீமான்!!
சென்னை, 22 ஜூலை (ஹி.ச) நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,
Seeman


Hb


சென்னை, 22 ஜூலை (ஹி.ச)

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணை கோரி அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஒன்றிய அரசு காவல்துறையின் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்க முடியாத அரச வன்முறை என தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் முறைகேட்டில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நீதி கேட்டு போராடுபவர்களை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணி செல்ல முயன்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் சீமான் விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டிய ஜனநாயக அமைப்புகளே மக்களின் குரலை ஒடுக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து முழுமையான நீதிவிசாரணை நடத்த வேண்டும், அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ