Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 22 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகக் பத்திர ஆவணங்கள், சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மற்றும் நிலப் பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று 7-வது நாளாகச் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பழனியில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
பழனி தண்டபாணி சுவாமி மடம் 100 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 40 செண்ட் அளவிலான நில மோசடி தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி வரும் 25-ஆம் தேதி அதிமுக சார்பில் பழனி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு, சர்ச்சைக்குரிய இடத்தை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN