பெருந்துறையில் போலீஸ் காவலில் இருந்த கைதி தப்பியோட்டம் – போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
ஈரோடு 22 ஜூலை (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, போலீஸ் காவலில் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி நள்ளிரவில் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (30), கொலை மிரட்டல் உள்ளிட்
கைதி தப்பியோட்டம்


ஈரோடு 22 ஜூலை (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, போலீஸ் காவலில் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி நள்ளிரவில் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (30), கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் போலீசார் அவரை கோவை மத்திய சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகே சுள்ளிப்பாளையம் பகுதியில், போலீசார் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியிருந்தனர்.

அப்போது நரேஷ்குமார் காவலர்களை தள்ளிவிட்டு தப்பியோடினார். இந்தச் சம்பவத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து காவலர்கள் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கைதி நரேஷ்குமாரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam