தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி மாணவர்களுக்கு ஆதரவு - சென்னையில் 2-வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை, 22 ஜூலை (ஹி.ச) டெல்லியில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி மாணவர்களுக்கு ஆதரவு - சென்னையில் 2-வது நாளாக தொடரும் போராட்டம்


சென்னை, 22 ஜூலை (ஹி.ச)

டெல்லியில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டு இரவிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளான இன்றும் அவர்களது ஆதரவு போராட்டம் தொடர்கிறது.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இப்போராட்டத்தின் போது, தேசிய தேர்வு முகமையின் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b