பாமக தலைவர் பதவி வழக்கு - வழக்கை திரும்பப் பெற்றார் ராமதாஸ்
சென்னை, 22 ஜூலை (ஹி.ச.) பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் திரும்பப் பெற்றார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உரிமையியல்
ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்


சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் திரும்பப் பெற்றார்.

இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்சிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் தொடர்பாக தன்னை பாமக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று கோரி ராமதாஸ் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதால், வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை,எனவே வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கை முடித்து வைத்தது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P