Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ரயில்வே பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகள் மர்ம நபர்களால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ரயில் நிலைய சுவர்களில், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகு உள்ளிட்ட வாசகங்களும், பொதிகை விரைவு ரயிலை சோழவந்தானில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுதப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுதப்பட்ட வாசகங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam