Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா , 22 ஜூலை (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம், கொடங்கல் தொகுதியில் நடைபெற்ற எஸ்ஐஆர் (SIR) வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது தனது எஸ்ஐஆர் படிவத்தை அவரே பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கினார்.
தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLA) ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிஆர்எஸ் மற்றும் பாஜக கட்சிகள் வெளிப்படையாக தனித்தனியாக செயல்படுவது போல் தெரிந்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்றுதான்.
இந்த இரு கட்சிகளின் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பதால், என்னை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கைகளில் பிஆர்எஸ் மற்றும் பாஜக ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுபோன்ற சதி முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் உயிருடன் இருந்தாலும், வாக்குரிமை இல்லாத நிலை உருவாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், எதிர்காலத்தில் அரசு நலத்திட்டங்களின் பலன்களை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஒவ்வொருவரும் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து தங்களது வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.
கொடங்கல் பகுதியில் எஸ்ஐஆர் பணிகள் 78 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ளவர்களும் விரைந்து படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கொடங்கலில் காங்கிரஸ் நடத்திய போராட்ட பேரணியில், ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA