ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி போராட்டங்கள் அரசியல் நாடகங்கள்- மத்திய மந்திரி பண்டி சஞ்சய் தாக்கு
ஐதராபாத் , 22 ஜூலை (ஹி.ச.) ராகுல் காந்தி டெல்லியிலும், தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மாநிலத்திலும் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் அரசியல் நாடகங்கள் என்று மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது அறிக்கைய
A


ஐதராபாத் , 22 ஜூலை (ஹி.ச.)

ராகுல் காந்தி டெல்லியிலும், தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மாநிலத்திலும் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் அரசியல் நாடகங்கள் என்று மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காகவும், மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு விவகாரம் மற்றும் தெலங்கானாவில் 6 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது.

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை அது பா.ஜனதாவுக்கே சாதகமாக இருக்கும்.

பா.ஜனதாவுக்கு பிரசார தூதர் போல செயல்படுகிறார்.

ராகுல் காந்தி வருங்கால பிரதமர் என்று ரேவந்த் ரெட்டி கூறியது மிகப்பெரிய நகைச்சுவை.

நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது.

பிரதமர் இல்லம் அருகே சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்த போராட்டத்தால் தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தெலங்கானாவில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

பாசன நீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கப்படுவதுடன், உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் போராட்டங்களை நடத்துவதில் மட்டுமே காங்கிரஸ் அரசு கவனம் செலுத்துகிறது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA