Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 22 ஜூலை (ஹி.ச.)
ஸ்விக்கி, சோமாட்டோ, ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட அகரிகேட்டர் நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான கிக் தொழிலாளர்கள், டெலிவரி ஊழியர்கள், ஆட்டோ மற்றும் கேப் டிரைவர்களின் வாழ்வாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் கல்வகுண்ட்லா கவிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
நாள் முழுவதும் கடுமையாக உழைத்தாலும், அவர்கள் பெறும் வருமானம் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு குறைவாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பயணக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும், அரசு இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், அகரிகேட்டர் நிறுவனங்கள் அதிகளவில் கமிஷன் பிடித்தம் செய்வதுடன், கட்டணங்களையும் தன்னிச்சையாக நிர்ணயிப்பதால் டிரைவர்களும் டெலிவரி ஊழியர்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
எனவே, அரசு உடனடியாக அகரிகேட்டர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் கட்டண உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் சூழல் உருவாகக்கூடும்.
கிக் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு
டி.ஆர்.எஸ். கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும் கல்வகுண்ட்லா கவிதா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA