இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி, 22 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். க்யூ பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அட
Beedi Leafs


தூத்துக்குடி, 22 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

க்யூ பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை செந்தூர் நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,500 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளையும், அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குரங்கன் தட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த கடத்தல் முயற்சியின் பின்னணியில் வேறு யார் யார் தொடர்புடையவர்கள், இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து க்யூ பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN