Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நிர்வாகக் காரணங்களுக்காக 5 முக்கிய ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து இன்று (ஜூலை 22) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கும், சிவகங்கை எஸ்.பி ஆர்.சிவப்பிரசாத் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி ஆயுதப்படடை டி.ஐ.ஜி விஜயலட்சுமி, சென்னை ஊர்காவல்படை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி எஸ்.பி சண்முகப்பிரியா சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பியாகவும், ராமநாதபுர ஏ.டி.எஸ்.பி மீரா டி.ஜி.பி அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களின் எஸ்பிக்கள் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b