ஹால்மார்க் முத்திரை இல்லாத ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
திருச்சி, 22 ஜூலை (ஹி.ச.) கோயம்புத்தூரில் உள்ள இந்திய தர நிர்ணய (BIS) அமைப்பின் கிளை அலுவலக அதிகாரிகள் அடங்கிய இரண்டு குழுக்கள் திருச்சியில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்திய தர நிர்ணய சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழ் இந்த ச
BIS


திருச்சி, 22 ஜூலை (ஹி.ச.)

கோயம்புத்தூரில் உள்ள இந்திய தர நிர்ணய (BIS) அமைப்பின் கிளை அலுவலக அதிகாரிகள் அடங்கிய இரண்டு குழுக்கள் திருச்சியில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்திய தர நிர்ணய சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின்போது, ஹால்மார்க் தனித்துவ அடையாளம் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 4.9 கிலோ தங்க நகைகள் கண்டறியப்பட்டன.

அவற்றின் மதிப்பு ரூ.7.35 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மேல்நடவடிக்கைக்காக எடுத்துச் சென்றனர்.

மேலும், ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்வது இந்திய தர நிர்ணய சட்டத்தின்படி குற்றமாகும்.

இத்தகைய விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும், நகைகளின் மதிப்பின் ஐந்து மடங்கு வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நுகர்வோர்கள் ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் BIS அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN