Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தம்பதியை, சென்னை மதுரவாயலில் மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.
நந்திகிராமத்தில் 35 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை மதுரவாயலில் பதுங்கியிருந்த அலீம் கான் (45) மற்றும் அவரது மனைவி சிமகதுன் (26) ஆகியோரை, மதுரவாயல் காவல்துறையின் உதவியுடன் மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.
கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான இருவரும், மதுரவாயலில் டைல்ஸ் கடையில் பணியாற்றும் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர், மேலதிக விசாரணைக்காக அவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam