Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 23 ஜூலை (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் நேற்று மாலை சிறைப்பிடித்தனர்.
பிரவீன் (45)அருள் லொயோலா (43)சபரி வினோத்வின் (42)கீர்த்திசன் (20)செந்தில் (41)கயாஸ் (31)மாலிக்தினார் (63) உள்பட கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் விசாரணைக்குப் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b