கள்ளக்குறிச்சி அருகே லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஜி-பே மூலம் ரூ.8 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
கள்ளக்குறிச்சி, 23 ஜூலை (ஹி.ச.) அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது தொடர்பாக வந்த தொடர் புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நே
கள்ளக்குறிச்சி அருகே லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஜி-பே மூலம் ரூ.8 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்


கள்ளக்குறிச்சி, 23 ஜூலை (ஹி.ச.)

அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது தொடர்பாக வந்த தொடர் புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.

அலுவலகத்தில் உள்ள கோப்புகள், கணக்கு பதிவேடுகள் மற்றும் அலுவலர்களின் செல்போன்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையின் போது, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு பணிகளுக்காக ஜி-பே மூலம் சுமார் ரூ.8 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. பணத்தை நேரடியாக வாங்காமல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b