Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 23 ஜூலை (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வைஷ்ணவி தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் 25 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா கேட்டு அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வைஷ்ணவி தெருவில் வசிக்கும் பரமசிவம், நான்கு-ஐந்து தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவர், மாவட்ட நிர்வாகத்தின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வசித்து வருகிறார்.
வீட்டிற்கான பத்திரம் இருந்தாலும், மனைக்கு பட்டா இல்லாததால் பல்வேறு அரசு உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக குறைதீர்க்கும் முகாம், வட்டாட்சியர் அலுவலகம், ஜமாபந்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் 15-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என அவர் வேதனை தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் எந்த காரணமும் தெரிவிக்காமல் நான் கொடுக்கும் அனைத்து மனுக்களையும் பென்னாகரம் வட்டாட்சியர் நிராகரித்து வருகிறார் என பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தனக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN