Enter your Email Address to subscribe to our newsletters

ஹராரே , 23 ஜூலை (ஹி.ச.)
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஹராரேயில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் மில்டன் ஷும்பா காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மருத்துவர்கள் ஓய்வு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் இனோசென்ட் கையாவை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது.
இந்திய அணியை எதிர்கொள்ளும் முக்கிய தொடருக்கு முன்பாக இந்த மாற்றம் ஜிம்பாப்வே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA