Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியான இந்தப் படத்திற்காக கோவை பிராட்வே திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர்.
சட்டவிரோத இணைய வெளியீடு, தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவியது. விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக் கூறப்படுவதால், ரசிகர்களிடம் நெகிழ்ச்சியும் காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், தமிழ்நாட்டிலேயே காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிட திட்டமிடப்பட்ட கோவை பிராட்வே திரையரங்கில் ரசிகர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.
தொடர்ந்து, காலை 7.05 மணிக்கு ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam