Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 ஜூலை (ஹி.ச.)
தமிழக முதல்வரும் நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ரவி திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதையொட்டி காலை 7 மணி முதலே திரையரங்கு முன்பு திரண்ட ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் டி.ஜே. இசையுடன் ஆட்டம், பாட்டம் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர்.
திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர விஜய் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, மலர் தூவி ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ரசிகர்களுடன் கேக் வெட்டி, குத்தாட்டம் போட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
மேலும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் முதல் காட்சியை காண நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் திரையரங்கிற்குள் சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam