Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள தபால் நிலையத்தின் பெயர்ப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி வாசகங்கள் மர்ம நபர்களால் பெயிண்ட் பூசி அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்தச் செயல் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன், சோழவந்தான் ரயில் நிலைய பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளும் இதேபோன்று அழிக்கப்பட்டிருந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று சோழவந்தான் தபால் நிலைய பெயர்ப் பலகையில் இருந்த இந்தி வாசகங்களும் பெயிண்ட் பூசி அழிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்த சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், வழக்குப்பதிவு செய்து இந்தச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி வாசகங்கள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் சோழவந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam