Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 23 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி, அரச பயங்கரவாதத்தால் பலியான போராளிகளின் நினைவு தினமான இன்று (23.07.26) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரணியாக சென்று தாமிரபரணி நதிக்கரையில் வீரவணக்கம் செலுத்தினர்.
இதில் பங்கேற்ற அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
விடுதலை சிறுத்தைகள் அனைத்து கட்சியினருடன் நட்பாக தான் இருக்கிறோம். பாஜகவின் எதிர்ப்பு புள்ளிகளோடு தான் நாங்கள் கூட்டணி அமைக்கிறோம் என்பது எங்கள் தலைவர் பலமுறை கூறியிருக்கிறார். எங்களின் இலக்கு பாஜகவின் எதிர்ப்பு.
பாஜக என்பது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல ஒரே கட்சி இருக்க வேண்டும் என்பதை தான் கருதுகிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. அதை வலியுறுத்தி எங்கள் கட்சி சார்பில் வரும் 27 தேதி போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். நேற்றைய தினம் முதலமைச்சர் விஜய் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி அறிக்கை கொடுத்துள்ளார்.
நான் ஜனநாயகன் படம் இன்னும் பார்க்கவில்லை. நான் மக்களோடு களத்தில் இருக்கிறேன்.
நீட் தேர்வு குறித்து பாஜகவினர் கருத்து செல்வதற்கு யாருக்கும் எந்த தகுதியும் இல்லை. நான் நீட் தேர்வு குறித்து மாணவர்கள் குறித்தும் கவலைப்படுகிறேன்.
சினிமா குறித்து என்னிடம் கேட்க வேண்டாம். அது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேட்க வேண்டும் அவரிடம் கேளுங்கள். ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றுவது குறித்து இன்னும் அந்த திட்டத்திற்கு பெருமைப்படுத்துவதற்காக தான் பெருந்தலைவர் காமராஜரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN