Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பது மாணவர் போராட்டங்களுக்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகார அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றும், மாணவர்களின் போராட்டம் நியாயமானது என்பதையும் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்
Hindusthan Samachar / P YUVARAJ