மாணவர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - பிரதமரின் விளக்கம் போதாது சு. வெங்கடேசன் வலியுறுத்தல்
மதுரை, 23 ஜூலை (ஹி.ச.) நீட் உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட பதிவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ்
Su Venkatesan


மதுரை, 23 ஜூலை (ஹி.ச.)

நீட் உள்ளிட்ட கல்வி தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட பதிவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

மாணவர்களின் போராட்டம் உறங்கிக் கொண்டிருந்த பிரதமரை எழுப்பியிருப்பது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பிரதமரின் பதிவில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும், கல்வி அமைப்பைச் சிதைத்ததாக குற்றம்சாட்டப்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்த யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், அறவழியில் போராடிய மாணவர்களை மனிதத்தன்மையின்றி தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரையில், இதுபோன்ற விளக்கங்களும் சமாளிப்பு முயற்சிகளும் மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தாது என்பதை பிரதமர் உணர வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P