Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 ஜூலை (ஹி.ச.)
நீட் (NEET) நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த மசோதா வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநிலங்களவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அலுவல் பட்டியலிலும் மசோதா இடம்பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய (National Medical Commission) சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டு தேசிய பல் மருத்துவ ஆணைய (National Dental Commission) சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
நீட் தேர்வு சமூக நீதி, மாநிலங்களின் கல்வி உரிமை மற்றும் மாணவர்களின் சம வாய்ப்பை பாதிப்பதாகக் கூறி, அதனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த மசோதாவை பி. வில்சன் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P