Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 23 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் நினைவு தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழகம் சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளருமான ஆர் எஸ் முருகன் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது,
இந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சரிடம் இது தொடர்பாக எடுத்துக் கூறுவேன் என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரணியாக சென்று தாமிரபரணி நதிக்கரையில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN