விஜய்யை இனி திரையில் பார்க்க முடியாது என்பது வருத்தமாக உள்ளது - மதன் ராஜா
நீலகிரி, 23 ஜூலை (ஹி.ச.) தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஸ்ரீ கணபதி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்
Minister Madhan Raja


நீலகிரி, 23 ஜூலை (ஹி.ச.)

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஸ்ரீ கணபதி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. திரைப்பட விழாவை பண்டிகை போல் கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், உதகையில் உள்ள கணபதி திரையரங்கம் அலங்கரிக்கப்பட்டு முதலமைச்சர் விஜயின் புகைப்படங்களோடு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

திரைப்படத்தைக் காண சிறு, குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா வருகை தந்தார்.

அப்போது சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அவர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்பு தவெக கட்சியினருடன் பேரணியாக திரையரங்கிற்கு நடந்து சென்றார். அங்கு பிரம்மாண்ட கேக் வெட்டி தளபதி என கோஷமிட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கேக் வழங்கினார்.

அதன் பின்பு திரையரங்கிற்குள் சென்ற அமைச்சர் டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய் என பெயர் வந்தபோது பூக்களை திரையை நோக்கி வீசி உற்சாகமடைந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நீண்ட போராட்டத்திற்குப் பின்பு ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. இதனால் அனைவரும் உற்சாகமாக உள்ளோம் எனக் கூறிய அமைச்சர் எங்கள் தலைவரை விரைவில் பார்க்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறோம் எனவும் அதே நேரம் இனிவரும் நாட்களில் எங்கள் தலைவரை திரையில் பார்க்க முடியாது என்ற வருத்தமும் உள்ளது என தெரிவித்த அவர் இருந்தாலும் எங்கள் தலைவர் மக்கள் பணிக்காக வந்துள்ளார்.

மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளார்.

அதனால் தொண்டர்களாகிய நாங்களும் அவருடன் தோளோடு தோளாக நின்று மக்களுக்கான சேவையை செய்வோம் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN