Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மனுதாரரே தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருப்பத்தூர் தொகுதிக்குரிய ஒரு தபால் வாக்கு தவறுதலாக வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக பெரியகருப்பன் குற்றம்சாட்டியிருந்தார். அந்த தபால் வாக்கை மீட்டு, உரிய முறையில் எண்ணிக்கையில் சேர்த்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
மேலும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் தற்போதைய சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கை தொடர விருப்பமில்லை என்றும், மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P