Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 ஜூலை (ஹி.ச)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், சொகுசு கார் புளிய மரத்தில் மோதி நொறுங்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், மூன்று குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் குடும்பத்தினருடன் சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
மேலும், காரில் பயணம் செய்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் இல்லாததால் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN